கொல்லிமலை திருப்பிலி நாடு பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமை அமைப்பு சார்பில் பள்ளியில் புகையில்லா போகி கொண்டாட வேண்டும் என பள்ளி மாணவ மாணவியுடைய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவிகள் என திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.