நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சங்ககிரி சாலையில் வெடியரசம்பாளையம் என்ற பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு புனித தீர்த்த குடம் எடுக்கும் நிகழ்வானது நடைபெற்றது. காவிரி ஆற்றில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். மேலும் கோவிலில் இதனை ஒட்டி விசேஷ வழிபாடுகள் நடைபெற்றன. பிறகு கோவில் நிர்வாகம் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது.