
குமாரபாளையம்: புகையிலை பொருட்கள் பறிமுதல்; இரண்டு பேர் கைது
குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வந்தனர். அப்போழுது பெங்களூரிலிருந்து கோவை நோக்கி சென்றுகொண்டிருந்த காரை போலீசார் சோதனை செய்தில் அதில் இருந்து 143 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து அவர்கள் ஓட்டிவந்த காரை போலீசார் பறிமுதல் செய்தும் இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.