பள்ளிபாளையம் நகராட்சியானது தற்போது மூன்றாம் நிலை நகராட்சியாக உள்ளது. இந்த நகராட்சியுடன் கலியனூா், கலியனூா் அக்ரஹாரம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், ஓடப்பள்ளி, அக்ரஹாரம் ஆகிய ஐந்து ஊராட்சிகளை இணைத்து நகராட்சியை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனர்.