நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சட்டையம்புதூர் அழகு முத்து மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை கடந்த வாரம் பூச்சாட்டுதலின் போது, பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் வந்தனர். மாரியம்மனுக்கு வேண்டுதல் வைத்த முளைப்பாரிகளை பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்து, பெரிய தெப்பக்குளத்தில் முளைப்பாரியை விட்டு வழிபட்டனர். தொடர்ந்து மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது. பிறகு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.