நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் (ம) தேசிய வேளாண் ஆராய்ச்சி மேலாண்மை நிறுவனம் ஹைதராபாத் இணைந்து பட்டியலின விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு 5 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சியை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து இன்று வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தலைமையில் பூச்சியியல் துறை பேராசிரியர் C. சங்கர் ஒருங்கிணைப்பில் முத்துக்காபட்டிக்கு விவசாயிகளை அழைத்து சென்று, காளான் வளர்ப்பு குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.