நாமக்கல்: மருந்துக் கடைகளில் தீவிர ஆய்வு
பரமத்தி வேலூர் அடுத்த பருத்திப்பள்ளி பகுதியில் இளம் பெண் கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்டு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டு கடந்த பத்தாம் தேதி உயிர் இழந்தார். இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் நேற்று(அக்.15) மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், மல்லசமுத்திரம் மற்றும் பருத்திப்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள மருந்துக் கடைகளில் மருந்து ஆய்வாளர்களுடன் இணைந்து தீவிர சோதனை நடத்தினர்.