நாகையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
நாகை வெளிப்பாளையத்தில் இயங்கி வரும் காலை உணவுத் திட்ட மைய சமையல் கூடத்தில் சமையலறை, பொருள்கள் சேமிப்பு அறை, உணவுத் தயாரிக்கும் பணிகளை பாா்வையிட்டாா். தொடா்ந்து, காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்த பிறகு, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று மருந்தகம், மருத்துவா் அறையை பாா்வையிட்டாா். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருந்துகளின் இருப்புகள் குறித்தும் மருத்துவ அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். அடுத்து, அந்தோணியாா் பள்ளி வடக்கு பகுதியில் ரூ. 6 கோடியில் அமைக்கப்பட்டு வரும் மழைநீா் வடிகால் பணிகள், நாகூா் தங்கச்சி மடத்தெருவில் அம்ருத் 2. 0 திட்டத்தின் கீழ் ரூ. 2. 44 கோடியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டுமான பணி, தெத்தி ஊராட்சியில் ரூ. 3. 50 லட்சத்தில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுமானம், திருப்பூண்டி மேற்கு ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ. 27. 30 லட்சத்தில் 740 மீட்டரில் காரைநகா்-புதுப்பாலம் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டாா்.