நாகப்பட்டினம் மாவட்டத்தில் சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இன்று திடீரென திருப்பூண்டி, காரைநகர், சிந்தாமணி, மேலப்பிடாகை, காரப்பிடாகை, தண்ணீர் பந்தல் உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வந்ததுடன் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி காணப்பட்டது மேலும் தற்போது சம்பா சாகுபடி பணிகள் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்