வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் அம்மன் கப்பல் அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் ஆலயம் பல வரலாற்று சிறப்புகளை கொண்டது. இந்த ஆலயத்தில் கடந்த 3ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்கியது. இரண்டாம் நாள் இரவு வேதநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு கொலுமண்டபத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் கப்பல் அலங்காரத்தில் எழுந்தருளிய வேதநாயகி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதில் உபயதாரர் மணிவண்ணன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.