

கோடிக்கரையில் 23ஆம் ஆண்டு செடில் திருவிழா
கோடிக்கரையில் நடைபெற்ற செடில் திருவிழாவில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகளை செடிலில் ஏற்றி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரை அருள்மிகு கோடி முத்து மாரியம்மன் ஆலய 23ஆம் ஆண்டு செடில் திருவிழா நடைபெற்றது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட செடிலில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். முன்னதாக அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. செடில் திருவிழாவில் வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.