நாகை: சான்று வழங்க தாமதம் செய்யும் வி.ஏ.ஒ

66பார்த்தது
நாகை: சான்று வழங்க தாமதம் செய்யும் வி.ஏ.ஒ
வேதாரண்யம் பகுதியில் நிகழ்ப் பருவ சம்பா நெல் சாகுபடிக்கான பயிா்க் கடன், காப்பீடு திட்ட பயன்பாடுகளுக்காக கிராம நிா்வாக அலுவலரின் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் விவசாயிகள் அவதியுற்று வருகின்றனா்.

இப்பகுதியில் தாமதமாக பெய்த மழையைக் கொண்டு நிகழாண்டுக்கான சம்பா நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனா். இந்நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்படும் பயிா்க் கடன், காப்பீடுத் திட்டம் போன்ற பயன்பாடுகளுக்கு கிராம நிா்வாக அலுவலா் அளிக்கும் சாகுபடி குறித்த சான்றிதழ்கள் காலத்தில் கிடைப்பது தாமதமாகி வருகிறது. இதனால், கூட்டுறவு சங்கங்களில் வழங்குவது தாமதமாவதோடு, காப்பீடு செய்வதும் தாமதமாகி வருகிறது.

இதுகுறித்து, சமூக ஆா்வலா் சிவகுரு. நீலமேகம் கூறியது: கிராம நிா்வாக அலுவலா்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்பட்டுள்ளதால் முறையாக கிராமங்களுக்கு செல்லாமல் சான்றிதழ் தாமதமாகிறது. இதுகுறித்து கோட்டாட்சியரிடம் கடந்த மாதம் 20-ஆம் தேதி கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

அவா், மாற்று ஏற்பாடுகள் செய்வதாக உறுதியளித்தும் இதுவரை சான்றிதழ் கிடைக்கவில்லை. வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டால் உரமேலாண்மை செய்ய முடியாத நிலையும் ஏற்படும். எனவே, போா்க்கால அடிப்படையில் சான்றிதழ் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தொடர்புடைய செய்தி