வேதாரண்யம் - Vedharanyam

விவசாயிகள் சங்க தேசிய மாநாடு பிரச்சார இயக்கம்

விவசாயிகள் சங்க தேசிய மாநாடு பிரச்சார இயக்கம்

அகில இந்திய விவசாயிகள் சங்க 30-வது தேசிய மாநாடு வரும் ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நாகையில் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் திருமருகல் ஒன்றியம் மேலப்பூதனூர் பகுதியில் விவசாய சங்க நிர்வாகிகள் கலியபெருமாள், வரதராஜன் ஆகியோர் தலைமையில் விவசாய சங்க மாநில குழு நிர்வாகி தங்கையன் துவக்கி வைத்தார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ், நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று மாநாட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்