சமீபத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அஞ்சல் ஊழியர் சுமதி என்பவர், அதிகாரிகள் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டார் இவரது மரணத்திற்கு நீதி கேட்டும், பாதிக்கப்பட்ட ஊழியர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும், அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் தலைமை தபால் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அஞ்சல் ஊழியர்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். சங்கத்தின் கோட்டத் தலைவர் ஜி மதியழகன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர்