நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் தற்கொலை முயற்சி

82பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா அகனி கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் பட்டியல் எழுத்தராக கொண்டல் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஐயப்பன். 47. என்பவர் பணியாற்றி வருகிறார் இந்நிலையில் நேற்று இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தர கட்டுப்பாடு பிரிவு துணை மேலாளர் மகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் தரம் சரி இல்லாதது தெரியவந்தது. இதனை அடுத்து பட்டியல் எழுத்தருக்கு ரூ 71 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் கருப்பு பட்டியலில் இடம் பெற்று 5 ஆண்டுகளுக்கு வேலை கிடைக்காது. மேலும் அபராத தொகை முழுமையாக கட்ட வேண்டும் என்பதால் மனமுடைந்த ஐயப்பன் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு அருகில் உள்ள பம்பு செட்டிற்கு சென்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவரை கொள்முதல் நிலைய ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்கு சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி