சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைதாகி சிறைச்சென்று வந்த நாகப்பட்டினம் அடுத்த காடம்பாடி ஏடிஜே தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் செந்தில்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டுமொத்த கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் எட்டாவது நாளாக கருப்பு பேட்ச் அணிந்து மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கருப்பு பேட்ச் அணிந்து ஊழியர்கள் எட்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபடுவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.