மகாளய பட்ச அமாவாசையை ஒட்டி வழிபாடு

66பார்த்தது
புரட்டாசி மாத மகாளய பட்ச அமாவாசையை ஒட்டி ஏராளமானோர் கோடியக்கரை கடலில் புனித நீராடினர்.

மாதம் தோறும் அமாவாசை தினம் வந்தாலும் ஆடி, தை, மற்றும் புரட்டாசி மாத அமாவாசை சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்நாளில் நீர் நிலைகளில் தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து புனித நீராடினால் தங்களுக்கு முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. மாதந்தோறும் திதி, தர்ப்பணம் கொடுக்க இயலாதவர்கள் புரட்டாசி மாத அமாவாசையில் திதி, தர்ப்பணம் கொடுத்தால் சகல நன்மையும் உண்டாகும் என்பது நம்பிக்கை. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை ஆதிசேது கடலில் ஏராளமானோர் புனித நீராடி கடவுளை வழிபட்டனர்.

பச்சரிசி , எள், காய்கறிகள், அகத்திக்கீரை உள்ளிட்ட பொருட்களை வைத்து தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடினர். புனித நீராடலில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி