மயிலாடுதுறை: தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம்.. ரூ. 50 லட்சம் நிதி
மயிலாடுதுறை மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் நடப்பு நிதி ஆண்டில் மாநில தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் ரூ. 50. 29 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: தோட்டக்கலைப் பயிா்களின் பரப்பு விரிவாக்கம் இனத்தின்கீழ் உயா் ரக காய்கனி குழித்தட்டு நாற்றுகளான கத்தரி, மிளகாய் மற்றும் வெண்டை, கொத்தவரை, பாகல், புடலை, பீா்க்கன் காய்கனி விதைகள் ஆகியவற்றுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20, 000 மானியம் வீதம் 100 ஹெக்டேருக்கு ரூ. 20 லட்சம், தென்னை பரப்பு விரிவாக்கம் ஹெக்டேருக்கு ரூ. 12, 000 வீதம் 50 ஹெக்டேருக்கு ரூ. 6 லட்சம், உதிரிமலா்கள் சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ. 16, 000 வீதம் 35 ஹெக்டேருக்கு ரூ. 5. 60 லட்சம், தென்னையில் ஊடுபயிராக வாழை பயிரிட ஹெக்டேருக்கு ரூ. 10, 000 வீதம் 50 ஹெக்டேருக்கு ரூ. 5 லட்சம், காளான் வளா்ப்புக்குடில் அமைப்பதற்கு ஒரு எண்ணிற்கு ரூ. 50, 000 வீதம் 3 எண்களுக்கு ரூ. 1. 50 லட்சம், பாரம்பரிய காய்கனி விதைகள் பரப்பு விரிவாக்கம் ஹெக்டேருக்கு ரூ. 20, 000 வீதம் 30 ஹெக்டேருக்கு ரூ. 6 லட்சம், மிளகாய் குழித்தட்டு நாற்றுகள் பரப்பு விரிவாக்கம் ஹெக்டேருக்கு ரூ. 12, 000 வீதம் 35 ஹெக்டேருக்கு ரூ. 4. 20 லட்சம் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.