வேதாரண்யம் - Vedharanyam

நாகை: நாலுவேதபதி சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

நாலுவேதபதி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த நாலுவேதபதி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது.  கடந்த 4ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய யாகசாலை பூஜை இன்று காலை நான்காம் கால யாக பூஜை நிறைவுற்று புனித நீர் கலசங்கள் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து வந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு விமான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தில் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் பெற்றனர்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்