வேதாரண்யம் அருகே விவசாயிகள் சாலை மறியல்
இழப்பீடு வழங்காத பயிர் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முரன்பாடுகளை கண்டித்து வேதாரண்யம் அருகே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தாணிக்கோட்டகம் , வடமழை , மணக்காடு, மேலமருதூர், கரியாப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 2023- 24-ம் ஆண்டில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் சம்பா சாகுபடி செய்து முற்றிலும் மகசூல் இழந்த நிலையில் விவசாயிகளை வஞ்சிக்கும் விதமாக ஒரு சில கிராமங்களுக்கு மட்டும் இழப்பீடு கொடுத்து விட்டு பெரும்பாலான கிராமங்களுக்கு இழப்பீடு தராமல் வஞ்சிந்த இப்கோ - டோக்கியோ நிறுவனத்தினை கண்டித்து பாதிக்கபட்ட விவசாயிகளோடு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் நாகை மாவட்ட கெளரவ தலைவர் கருணைநாதன் தலைமையில் செங்காத்தலை பாலத்தில் 100க்டும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை திருத்துறைப்பூண்டி போலிசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இப்போராட்டத்தால் திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.