காய்கறிகளில் பல்வேறு வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதே நேரம் சில காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது தீமைகளையும் ஏற்படுத்தும். பீட்ரூட்: ஒவ்வாமை பிரச்னை இருந்தால் பீட்ரூட் சாறு எதிர்வினைகளை ஏற்படுத்தும். மேலும் கல்லீரல் மற்றும் கணையத்தைச் சேதப்படுத்தும். பிரக்கோலி, காலிஃப்ளவர் காய்கறிகளை அதிகம் உண்ணுவதால் செரிமான பிரச்சனை ஏற்படும். இதனுடன் வாயு தொல்லை உண்டாகும் வாய்ப்புகளும் அதிகரிக்கிறது.