ஸ்ரீபெரும்புதூா் சாம்சங் நிறுவன தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, நாகையில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நாகை அவுரித் திடலில் சிஐடியு தொழிற்சங்க மாவட்டத் தலைவா் சிவனருட்செல்வன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூரில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்; தொழிற்சங்க உரிமை, ஜனநாயக உரிமையை பறிக்கும் நடவடிக்கையை காவல்துறை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடா்ந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதன்காரணமாக, நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.