வந்தே பாரத் ரயில் உணவில் வண்டு: ரூ. 50,000 அபராதம் விதிப்பு
நெல்லையில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரயிலில் நேற்று (நவ. 16) பயணித்த முருகன் என்ற பயணிக்கு ரயில்வே நிர்வாகம் சார்பாக சாம்பார் இட்லி, வடை கொடுக்கப்பட்டது. அந்த சாம்பாரில் சிறிய அளவில் 3 வண்டுகள் இருப்பதைக் கண்ட பயணி முருகன் அது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் புகாரளித்தார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் உணவு விநியோகம் செய்த நிறுவனத்திற்கு தெற்கு ரயில்வே ரூ. 50,000 அபராதம் விதித்துள்ளது.