வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் சாம்பாரில் வண்டுகள் இருந்ததால் பயணிகள் அதிச்சிக்குள்ளாகியுள்ளனர். நெல்லையில் இருந்து சென்னை வந்த வந்தே பாரத் ரயிலின் சாம்பாரில் இந்த வண்டுகள் கிடந்துள்ளது. ரயில் உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்களை வரவழைத்து வண்டுகளை காட்டி பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ஊழியர்கள், பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளனர்.