வாயில் கறுப்புதுணி கட்டியபடி தெருக்களில் போராட்டம்

77பார்த்தது
மதுரை மாநகர் பீ. பி. குளம் முல்லை நகர் , நேதாஜி மெயின்ரோடு, முன்னாள் ராணுவத்தினர் குடியிருப்பு ஆகிய பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 2500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்பகுதியில் ஆக்கிரமிப்பு இருப்பதாக கூறி நீர்வளத்துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன்னர். இது வழக்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் தேர்தல் காலத்தில் முல்லைநகர் பகுதி மக்களுக்கு எம் எல் ஏ கோ. தளபதி மற்றும் திமுகவினர் தங்கள் பகுதிக்கு பட்டா வழங்குவதாக வாக்குறுதி அளித்து விட்டு தற்போது கண்டுகொள்ளாமல் இருப்பதாக கூறி தமிழக அரசை கண்டித்தும் , தங்கள் பகுதியை நீர்நலைபகுதியிலிருந்து குடியிருப்பு பகுதியான வகைமாற்றம் செய்து பட்டா வழங்க கோரியும் முல்லை நகர் பகுதி மக்கள் தெருக்களில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து இரவுபகலாக தெருக்களில் சமைத்து உண்டு தங்கி போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் முல்லைநகர் பகுதி மக்கள் 6 ஆவது நாளாக வாயில் கறுப்பு துணியை கட்டியபடி தெருக்களில் குடியேறும் போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர். இதில் ஏராளமான பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், பள்ளி மாணாக்கர்கள், உள்ளிட்டோரும் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி