மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை நட்சத்திர தினத்தன்று முருக பெருமான் தங்கமயில் வாகனத்தில் எழுந்துருளி வீதி உலா நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் நேற்று (நவ. 16) கார்த்திகை மாத பிறப்பு கார்த்திகை நட்சத்திரம் என்பதால் தங்க மயில் வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வணங்கினார்கள்.