திருப்பரங்குன்றம்: முருகன் கோவிலில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்

82பார்த்தது
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ள சரவண பொய்கையில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள், மாலை அணிவித்து இன்று (நவ. 16) முதல் விரதத்தை தொடங்கினர்.

சபரிமலை ஐயப்பன் கோவில் கார்த்திகை 1ம் தேதி துவங்கி மண்டல பூஜைகள் நடக்கும். தொடர்ந்து தை ஒன்றாம் தேதி மகர விளக்கு பூஜைகள் நடைபெறும்.

இதற்காக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து 40 நாட்கள் விரதம் இருந்து இருமுடி சுமந்து பயணம் சபரிமலை பயணம் செல்வர்.

அதேபோல் முருகனை தரிசனம் செய்வதற்காக பழனி, திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களும் மாலை அணிவித்து தங்களது விரதத்தை தொடங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி