ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள புர்வா கிராமத்தில் சோலாங் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது அஞ்சனி மகாதேவ் கோயில். இமாச்சலப் பிரதேசத்தின் அமர்நாத் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. அனுமாரின் தாயான அஞ்சனா தேவி தனது தியானத்திற்காக இந்த அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து, அதற்கு தெய்வீக அருளையும் புனிதத்தையும் அளித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இங்கு இயற்கையாகவே அருவி மூலம் இறைவனுக்கு அபிஷேகம் நடப்பது சிறப்பு.