1920 நவம்பர் 17 பிறந்த, தமிழ் சினிமாவின் 'காதல் மன்னன்' ஜெமினி கணேசனின் 104-வது பிறந்த தினம் இன்று. எம்ஜிஆர், சிவாஜி என இரு பெரும் நடிகர்கள் கோலோச்சிய காலத்தில் அவர்களின் சாயலின்றி முன்னணி இடத்தைப் பிடித்தவர் ஜெமினி கணேசன். எம்ஜிஆர் ஆக்ஷன் ஹீரோவாகவும், சிவாஜி உணர்ச்சிகர நடிகராகவும் விளங்கிய போது இரண்டுக்கும் நடுவில் காதல், குடும்பம் என தனி பாணியில் பயணித்து ஜெமினி கணேசன் வெற்றி கண்டார்.