சோழவந்தான்: கோவில் கும்பாபிஷேகம் விழாவில் பக்தர்கள்.

68பார்த்தது
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மண்ணாடிமங்கலம் கிராம ஆர்சி தெருவில் உள்ள காளியம்மன் கோவில், விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில், கருப்புசாமி கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று (நவ. 16) நடைபெற்றது. யாகசாலையில் இருந்து புனித நீர் குடங்களை எடுத்து வந்து கோவிலை வலம் வந்தனர். கோபுர கசத்திற்கு புனித நீர் கொண்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. விநாயகர், காளியம்மன், மாரியம்மன், கருப்புசாமி ஆகிய தெய்வங்களுக்கு பால், தயிர் உள்ளிட்ட 21 திரவியங்களால் அபிஷேகமும், புனித நீரால் கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you