தீ விபத்தில் குழந்தைகள் பலி - உ.பி., அரசுக்கு நோட்டீஸ்

63பார்த்தது
உத்திரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று (நவம்பர் 15) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது விபத்து குறித்து, உத்திரப் பிரதேச மாநில அரசுக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி