ரஞ்சி கோப்பைக்கான லீக் ஆட்டத்தில் மத்திய பிரதேசம் - பெங்கால் அணிகள் மோதின. காயம் காரணமாக நீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்த முகமது ஷமி பெங்கால் அணிக்காக களம் இறங்கினார். இதில், பெங்கால் அணி 11 ரன்னில் திரில் வெற்றி பெற்றது. முகமது ஷமி சிறப்பாக பந்து வீசி 19 ஓவர்களில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்து, 4 விக்கெட்டுகள் சாய்த்தார். 2-வது இன்னிங்சில் 24.2 ஓவரில் 102 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். இரண்டு இன்னிங்சிலும் 7 விக்கெட் வீழ்த்தினார்.