தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநிலத் தலைவர் பேட்டி

83பார்த்தது
தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை சார்பில் மதுரை மண்டல பொதுக்கூட்டம் தமிழ்நாடு பழைய இரும்பு மொத்த வியாபாரிகள் சங்கம் இணைப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மாநிலத் தலைவர் முத்துக்குமார் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது,

வாடகைக்கு கடை நடத்துபவர்களுக்கு GST வரிவிதிப்பு என்பதை கடுமையாக எதிர்ப்பதாகவும் ஆன்லைன் வர்த்தகம் அந்நிய முதலீடுகளை வளர்ப்பதற்கு அதிகாரிகள் தவறான கொள்கையை அரசாங்கத்திடம் தெரிவித்து வருகின்றனர்.

ஜிஎஸ்டி எதிர்த்து உணவுப்பொருள் சர்வீஸ்செய்பவர்களுக்கு ஜிஎஸ்டி தரக்கூடாது என்று கொள்கை இருக்கிறது.

டிசம்பர் 9ஆம் தேதி மாநில பொதுக்குழு கூட்டம் கோயமுத்தூரில் நடைபெறுகிறது அதில் மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்துவதற்கு அறிவிப்பு வெளியாகும்.

கழிவு இரும்பு பொருள்களுக்கு 18 , 20 சதவீதம் வரி என்பது ஏற்க முடியாத ஒன்று வரி என்பது 2 சதவிதம் தான் இருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்தால் மின்கட்டணத்தை குறைப்போம் மாற்றி கொடுக்க அளவிடுவோம் என்று சொன்னார்கள் அது எதுவும் செய்யாமல் மின்கட்டணத்தை மூன்று தடவை உயர்த்தி உள்ளனர்.

திருச்சியில் இருந்து கரூருக்கு செல்கின்ற வாகனங்களுக்கு சுங்கசாவடியில் ஒரு அடி பாதையில் கூட வரி வாங்குகிறார்கள்.
மத்திய அரசு சுயதொழில் செய்பவர்களை கொத்தடிமையாக வைத்து இருக்கிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி