டெல்லியை சேர்ந்த ஷைபாலி கேக்பால் என்ற பெண் மேக்கப் கலைஞர், ஹாலோவின் திருவிழாவை கொண்டாடும் வகையில் பேய் வேடம் அணிந்து தெருக்களில் உலா வந்து ரீல்ஸ் எடுத்தார். ரத்த சிவப்பு வண்ண மை பூசி, கண்களில் 'லென்ஸ்' பொருத்திக்கொண்டு பேய் போன்று பயமுறுத்தும் வகையில் ஈடுபட்டார். கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த டெல்லி நகர் சாலையில் உலா வந்து குழந்தைகள், பெண்கள் ஆகியோரைப் பயமுறுத்தும் வகையில் ஈடுபட்டார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.