சமூக ஊடகங்களில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களுக்கு எதிராக சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்த நடிகை ஸ்ரீ ரெட்டி மீது குடிவாடா ஒன் டவுன் போலீசார் எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமை வழக்குப்பதிவு செய்துள்ளனர். சந்திரபாபு, பவன் கல்யாண், அனிதா ஆகியோருக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஆபாசமான பதிவுகளை பதிவிட்ட ஸ்ரீ ரெட்டி மீது நடவடிக்கை எடுக்குமாறு மச்சிலிப்பட்டினம் டிடிபி கட்சி ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் நிர்மலா போலீசில் புகார் அளித்திருந்தார்.