மேலூர் - Melur

ஒத்தக்கடை: 50 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

ஒத்தக்கடை: 50 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

மதுரை மாவட்டம், ஒத்தக்கடை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், நேற்று முன்தினம் (அக். 9) விவசாய கல்லூரிக்கு எதிரே அமைந்துள்ள தனியார் மைதானம் அருகே ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் சிவபாலன் மற்றும் அருண், சிறப்பு சார்பு ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சட்டத்திற்குப் புறம்பாக சுமார் 50 கிலோ கிராம் அளவுள்ள கஞ்சாவை TN 20 BM 5511 Ford Figo Car என்ற வாகனத்தில் கடத்தி வந்த விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனலெட்சுமி (56), மரக்காணம் கண்ணன் (34), சென்னை மணலி கேசவகிருஷ்ணன்( 22), ஆகியோர்களை கைது செய்து, மேற்படி நபர்களை விசாரணை செய்ததில் அவர்கள் ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்குள் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా