மதுரை மாவட்டம் மேலூர் அருகே சுண்ணாம்பூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆரணவள்ளி அம்மன் திருக்கோவில் முதலாம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க, புனித தீர்த்தம் நிரம்பிய குடங்கள் கோவிலின் கோபுரம் அமைந்துள்ள விமானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேதபாராயணம் முழங்க கோபுர கலசத்தின் உச்சியில் வானில் கருட பகவான் வட்டமிட, குடத்தில் இருந்த புனித நீரானது கோபுரத்தில் உள்ள கலசத்தில் ஊற்றப்பட்டு தீபாரணைகள் காட்டப்பட்டன.