மதுரை மாவட்டம் மேலூர் செக்போஸ்ட் திருச்சி மெயின் ரோட்டில் இருந்து பெரியார் பிரதான கால்வாய் வழியாக ஜோதி நகர், நொண்டி கோவில்பட்டி, ஆத்துக்கரைப்பட்டி, நாகப்பன்பட்டி, காமாட்சிபுரம் என இருபதுக்கு மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் வழி இந்த செம்மண் சாலையில் மழை நேரத்தில் தண்ணீர் தேங்கி, சகதியாகி மிகவும் சேதமடைந்து காணப்படுகின்றது. பல ஆண்டுகளாக அந்த கிராமத்தில் இருந்து பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
பாசனத்திற்காக பெரியார் பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் , இந்த சாலையில் செல்லக்கூடிய வாகனங்கள் ஆபத்தின் விளிம்பில் பயணிக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறும் பொதுமக்கள் இந்த சாலையை தார் சாலையாக அமைத்து தர அப் பகுதியில் தினமும் செல்லும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.