மதுரை மாவட்டத்தில் பெரியார் வைகை கடைமடை பாசன பகுதியான மேலூர் பகுதிக்கு செப். 15 இல் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது தீவிரமாக விவசாயப் பணிகள் நடைபெற்று வருகிறது. கால்வாயில் தண்ணீர் திறந்தது முதல் கால்வாயின் பாதி அல்லது முக்கால் அளவிற்கு மட்டுமே தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் (அக். 5 )இரவு சுற்று பகுதிகளில் பெய்த மழை நீர் கால்வாயில் வந்து கலப்பதால் நேற்று (அக். 6) காலை முதல் கால்வாயின் இரு கரைகளும் தழும்பியபடி தண்ணீர் சென்றது. இந்த காட்சி பார்ப்பதற்கு ரம்யமாக உள்ளது மேலும் விவசாமிகளுக்கு மகழ்ச்சியை அளிக்கும் வகையில் உள்ளது.