மேலூர்: புரட்டாசி புரவி எடுப்பு திருவிழா

78பார்த்தது
மேலூர்: புரட்டாசி புரவி எடுப்பு திருவிழா
மதுரை மாவட்டம், மேலூர் ஓட்டக்கோவில்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்விஅம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் உற்சவத்தை முன்னிட்டு புரட்டாசி புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.

நேற்று (அக். 8) 8-ம் தேதி வாணவேடிக்கை மேளதாளத்துடன் மந்தையிலிருந்து தேர்பவனி புறப்பட்டு, மாலை 4 மணி அளவில் ஸ்ரீ அம்மன் மற்றும் பரிவார தேவதைகள் (புரவி) தேர் ஏற்றல் நிகழ்ச்சி கருங்காலக்குடி சந்தி வீரன் பொட்டலில் இருந்து புறப்பட்டு கருங்காலக்குடி பேட்டை, திருச்சுனை வழியாக புரவியை பொதுமக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக தூக்கி சென்று ஓட்டக் கோவில்பட்டி செல்வ விநாயகர் கோவிலில் இறக்கி வைத்தனர். இரவு 7 மணியளவில் விநாயகர் கோவில் முன்பு கிராமத்து அர்ச்சனை மற்றும் வாணவேடிக்கை நடைபெற்றது. அதை தொடர்ந்து ஸ்ரீ அம்மன் பரிவார தேவதைகள் மந்தை சென்றடைந்து வாணவேடிக்கையுடன் வரவேற்க்கப்பட்டது. இரவு 10 மணி அளவில் சுவாமி கண் திறப்பு பூஜை நடந்தது.

இன்று (அக். 9)காலை 9 மணி அளவில் ஸ்ரீ விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், அம்மனுக்கு பாலாபிஷேகமும் அம்மன் மற்றும் பரிவார தேவதைகள் மந்தையிலிருந்து வீதி உலா புறப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7 மணி அளவில் சுவாமி திருக்கோவில் சென்றடைகிறது. அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை குட்டி சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி