மதுரை அருகே அழகர் கோவிலில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான கோயில்களில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அதனடிப்படையில் மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலின் முன்பக்கத்தில் உள்ள கிருஷ்ணர் சன்னதியில், கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கிருஷ்ண பசுவானுக்கு 9 வகையான அபிஷேகங்கள். பூஜைகள் வேத மந்திரங்களுடன் தீபாராதனைகளும் நடைபெற்றன.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் கோவிலின் உள்பிரகார சன்னதியில் உள்ள கிருஷ்ணர் சன்னதிகளிலும் பூஜைகள் நடைபெற்றன. பெண்களின் கோலாட்டம் நிகழ்வும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.