மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையத்திலிருந்து நேற்று (அக். 1) மாலை 6.10 மணிக்கு சேக்கிபட்டிக்கு நகரப் பேருந்து புறப்பட்டது. அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இந்த பேருந்தின் மேற்கூரை ஆங்காங்கே ஓட்டையாக இருந்ததால் மழையானது பேருந்திற்குள்ளும் பெய்தது.
பேருந்தில் கைக்குழந்தையுடன் இருந்த பெண்கள், முதியோர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் இருக்கையில் இருந்து எழுந்து நின்று கொண்டே பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது. பருவமழை தொடங்க உள்ள சூழலில் பயணிகள் நலன் கருதி மேற்கூரை ஒழுகும் பேருந்துகளை சரி செய்ய போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேருந்தில் நனைந்தபடியே பயணம் செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.