மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நொண்டிக்கோவில்பட்டியில் அமைந்துள்ள இளங்காம்பு கரை ஸ்ரீ அய்யனார் கோவில் உற்சவ விழா வெகுவிமர்சையாக இன்று நடைபெற்றது. முன்னதாக அய்யனார் சுவாமிக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டும், அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றது. பின்னர் விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு சைவ அன்னதானமும் நடைபெற்றது.