திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற ‘பாக்மதி எஸ்பிரஸ்’ ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பயணிகள் ரயிலின் 2 பெட்டிகள் தீப்பற்றி எரிந்து வருகிறது. இரவு நேரம் என்பதால் ரயிலில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.