மதுரை மாவட்டம் மேலூர் அருகே முல்லைப் பெரியாற்று கால்வாயில் உள்ள பாலம் சேதமாகி உள்ளது. இதனை விரைவாக சீரமைக்க வேண்டும் என. பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியாறு, வைகை ஒரு போக பாசனத்தின் கடை மடை பாசன பகுதியாக மேலூர் உள்ளது. இப்பகுதியில், விவசாயத்திற்கு தண் ணீர் வரும் பெரியாற்று கால்வாயில் பல இடங்களில் உள்ள பாலங்கள் சேதமான நிலையில் உள்ளது. இதன் ஒரு பகுதியாக நொண்டி கோவில்பட்டி செல்லும் வழியில் உள்ள பாலத்தின் ஒரு பக்க பாதுகாப்பு சுவர் இடிந்து சேதமாகி உள்ளது
இதனால் இப்பாலத்தை கடந்து செல்லும் டூவீலர்கள், பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவர்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலையில் உள்ளது. இரவு நேரத்தில் இந்த பாலத்தை கடக்கும் போது. போதிய வெளிச்சம் இல் லாததால், நிலைதடுமாறி கால்வாய்க்குள் விழும் ஆபத்து உள்ளது. எனவே சேதமடைந்த நிலையில் உள்ள பாலத்தை விரைந்து சீரமைக்க பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என. விவசாயிகள் மற்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.