மேலூர்: ஊரணியில் 34 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோட்டநத்தம்பட்டி ஊராட்சியில் மீன்வளத்துறை சார்பில் ஊரணிகளில் 34000 ஆயிரம் மீன் குஞ்சுகள் இன்று (அக். 19) விடப்பட்டன. கால்நடை பராமரிப்பு மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அவர்களின் சட்டப்பேரவை அறிவிப்பு எண் 18 ன் படி மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகாமை உள்ளாட்சி மற்றும் ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சாயத்து குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தின் படி மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கோட்டநத்தம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட 11 ஊரணிகளில் மொத்தம் 34000 ரோகு இண மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டது. அக்டோபர் 18ந் தேதி இருப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மதுரை மண்டல மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை துணை இயக்குநர் காசிநாத பாண்டியன், உதவி இயக்குநர் சிவராமச்சந்திரன், ஆய்வாளர்கள் முருகேசன், சோபியா மற்றும் மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரசாமி, ரத்தின கலாவதி, கோட்டநத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உஷா இளையராஜா, வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் சங்கையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.