மதுரை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மேலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அழகர்கோவில், அரிட்டாபட்டி, வெள்ளரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளரும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை வழங்கினார். நிகழ்வில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான், முன்னாள் எம்எல்ஏ தமிழரசன், வடக்கு ஒன்றிய செயலாளர் பொன். ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.