
மேலூர்: மத்திய அரசுக்கு எதிராக எம். பி ஆர்ப்பாட்டம்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியில் டங்க்ஸ்டன் சுரங்க ஏல அனுமதியை ஒன்றிய அரசு இரத்து செய்யக் கோரியும், வளங்களையும், வரலாற்றையும் காக்க மேலூரில் பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் இன்று (டிச. 15) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மதுரை எம்.பி. வெங்கடேசன் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.