மேலூர்: பழமையான கோவில் திருப்பணி தொடக்கம்

59பார்த்தது
மேலூர்: பழமையான கோவில் திருப்பணி தொடக்கம்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சொக்கலிங்கபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த அம்மன் ஆலயமான துபராள்பதி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து பால்குடம் எடுத்து தங்களை வேண்டுதலை நிறைவேற்றுவர். மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக இந்த கோவில் இப்பகுதியில் திகழ்கிறது.

இந்த நிலையில் கோவிலில் பல ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் செய்யும் விதமாக இன்று (அக். 5) கோவில் முன்பு சிவாச்சாரியர்கள் முன்னிலையில் ஹோம பூஜைகள் நடத்தி திருப்பணிகள் துவங்கியது. மேளதாளம் முழங்க நடைபெற்ற இந்த விழாவில் மூலவர் துபராள்பதி, விநாயகர், முருகன் சின்ன கருப்பு, பெரிய கருப்பு, சின்ன வீரன், பெரிய வீரன் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தி திருப்பணிகள் துவக்கப்பட்டது. இந்த பாலாலய நிகழ்ச்சியில் சொக்கலிங்கபுரம் மணல்மேட்டுபட்டி, ஆவாரங்காடு, ஆலம்பட்டி உள்ளிட்ட ஐந்து கிராம பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்வில் இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர் பொன்னுசாமிநாதன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். உபயதாரர்கள் மூலம் ஒரு வருட காலத்திற்குள் திருப்பணிகள் முடிவுற்று குடமுழுக்கு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் முன்பு ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்கவும் பணிகள் நடைபெற்று வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி