மதுரை மாவட்டத்தில் பெரியாறு வைகை ஒருபோக பாசனத்தின் கடைமடை பாசனப் பகுதியான மேலூர் பகுதிக்கு செப். 15 இல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இத்தண்ணீரை கண்மாய்களில் விவசாயிகள் தேக்கி வருகின்றனர். மேலும் கிணற்று பாசனம் மூலம் ஏற்கனவே நெல்மணிகளை பாவி வைத்திருந்தவர்கள் நாற்றுக்களை பிடுங்கி வயலில் நெல் நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேரடி கால்வாய் பாசன வசதி பெறும் விவசாயிகள் தற்போது நெல் நாற்றங்கால் அமைத்துள்ளனர். இதனால் மேலூர் பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.